TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
தோட்டக்கலை துறை
மானிய திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
குளித்தலை குளித்தலை தோட்டக்கலை உதவி இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குளித்தலை
வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வரும்,
2022-23 நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration.php என்ற இணைய வழியில்
விண்ணப்பிக்கும் படி
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைய
வழியில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி மானியம்
வழங்கப்படும். இணைய
வழியில் விண்ணப்பிக்க இயலாத
விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெற கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
2022-2023ம்
ஆண்டில் குளித்தலை வட்டாரத்தில் மா சாகுபடி செய்ய,
ஹெக்டேருக்கு, 6,120 ரூபாய்;
கொய்யா சாகுபடிக்கு, 9,201 ரூபாய்;
சப்போட்டா சாகுபடிக்கு, 10 ஆயிரத்து,
896 ரூபாய்; நடவு பொருட்கள்
மற்றும் இதர பொருட்கள்
மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும்
வீரிய ஒட்டு தக்காளி,
கத்தரி, மிளகாய் நாற்றுகள்
மானிய விலையில், 20 ஆயிரத்துக்கு வழங்கப்படுகிறது. வெண்டை
விதை மற்றும் இடுபொருட்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கும், மலர்
செடிகள் சாகுபடி செய்ய,
10 ஆயிரம் ரூபாயும்; நடவு
பொருட்கள் மற்றும் இதர
பொருட்கள் மானியத்தில் வழங்கப்பட
உள்ளது.
வாழையில்
ஊடுபயிராக, காய்கறி பயிர்கள்
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; வெற்றிலை
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட
உள்ளது.
தோட்டக்கலைத்துறை சார்ந்த அனைத்து
திட்டங்களும், கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்,
2022-2023ம் ஆண்டிற்கு தேர்வு
செய்யப்பட்டுள்ள மணத்தட்டை,
பொய்யாமணி, சூரியனுார் கிராமங்களுக்கு, 80 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


