கோகோ பயிரிட
தோட்டக்கலைத்துறை ஆலோசனை
இதுகுறித்து தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரபானு கூறியதாவது:
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பாக்கு
மற்றும் தென்னை தோட்டங்களில், ஊடு பயிராக சுமார்
60 ஏக்கரில் கோ–கோ
சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோகோ
நடவு செய்த 3 ஆண்டு
முதல் 40 ஆண்டுகள் வரை
பலன் தருகிறது.
இதன்
இலைகள் உதிர்வதன் மூலம்,
மண்ணின் அங்ககச் சத்து
அதிகரித்து தென்னை மற்றும்
பாக்கு மரங்களின் மகசூல்
அதிகரிப்பதால், இயற்கை
விவசாயம் செய்பவர்கள் இதனை
ஆர்வமாக பயிரிடுகின்றனர்.தற்போது
கோடை காலத்தில், ஒரு
மரத்திற்கு அதாவது 3 ஆண்டுகளுக்கு மேலான கோ–கோ
பயிர்களுக்கு, தலா
ஒரு மரத்திற்கு, 20 முதல்
25 லிட்டர் நீர் நாளொன்றுக்கு தேவைப்படுவதால், மூன்று
அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
மூன்று
ஆண்டுகளுக்கு மேலான
பயிருக்கு, வேர்பகுதியில் இருந்து,
150 செ.மீ., தூரத்தில்
வட்டப்பாத்தி அமைத்து
உரமிடுதல் சிறந்த முறை.நீர்
பற்றாக்குறை மற்றும் வேலை
ஆட்கள் பற்றாக்குறையை சரிசெய்ய,
தோட்டக்கலைத்துறை மூலம்
சொட்டு நீர் பாசனம்
அமைக்கலாம். மானியம் பெற்று
பயன் பெறலாம்.
காய்
பிடித்துள்ள கோகோ மரங்களில்
அறுவடை முடிந்த பிறகு,
தேவையற்ற கிளைகள் மற்றும்
நோய், பூச்சி தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய
வேண்டியது முக்கியம். நல்ல
முறையில் பராமரிக்கப்படும் ஒரு
கோகோ செடியிலிருந்து ஆண்டுக்கு,
2 கிலோ வரை விளைச்சல்
பெற முடியும். இதனால்
விவசாயிகளுக்கு கூடுதலாக
வருமானம் கிடைக்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


