தமிழ்நாடு மின்சார
வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
CORONA பரவல் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. இதனால்
தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில்
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் வரும் ஏப்ரல் 6ம்
தேதி வாக்குப்பதிவு நடத்த
தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 100 சதவீத
வாக்குப்பதிவை பெறும்
நோக்கில் ஏப்ரல் 6ம்
தேதி தமிழகம் முழுவதும்
பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அன்றைய
தினம் அனைத்து தனியார்,
பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது
பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க
வேண்டும் எனவும் தலைமை
செயலாளர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அதனை
பின்பற்றாத நிறுவனங்கள் மீது
குற்றவியல் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்களான மின்வாரிய
ஊழியர்களுக்கு அன்று
விடுமுறை அளிக்கப்படுமா? என்கிற
கேள்வி எழுந்தது.
இது
தொடர்பாக தற்போது அறிவிப்பு
வெளியாகி உள்ளது. தமிழ்நாடு
மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி
ஒரு நாள் விடுமுறை
அளிக்கப்படும் என
கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள
அத்தியாவசிய சேவை அலகுகள்
மற்றும் விநியோக அமைப்புகள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.