வரலாறு – முகலாயர்கள் – வினாக்களும் விடைகளும்
1. 1526ம் ஆண்டு
நடைபெற்ற முதலாம் ஆண்டு
பானிபட் போரில், பாபர்
____ யை திறம்பட பயன்படுத்தியதின்
மூலம் வெற்றிப் பெற்றார்.
a) காலாட்படை
b)குதிரைப்படை
c) பீரங்கிப்படை
d)யானைப்படை
2. ‘அயினி அக்பரி’
மற்றும் ‘அக்பர் நாமா’
போன்ற நூல்களை எழுதியவர்
யார்?
a) அபுல்
பைசி
b) அபுல்பாசல்
c) பீர்பால்
d) இராஜதோடர்மால்
3.பின்வரும் யார்
தனது உயரிய அரசியல்
மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றிப்
பெற்றார்?
a) பாபர்
b) ஹூமாயூன்
c) ஷெர்கான்
d) அக்பர்
4.பின்வரும் எந்த
நில உடைமை உரிமை
முறையில் நிலத்திற்கான வரியை
வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
a) ஜாகீர்தாரி
b) மகல்வாரி
c) ஜமீன்தாரி
d) மன்சப்தாரி
5.பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
a) பாபரின்
இயற்பெயர் ஜாகிருதின் முகம்மது
பாபர்.
b) பாபர்
தந்தை வழியில் துருக்கி–தைமூர்
இனத்தையும், தாய் வழியில்
மங்கோலிய–செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.
c) பாபர் தனது பதினாறாம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
d) கி.பி.
1526 ஆம் ஆண்டு ஏப்ரல்
21ம் நாள் பானிபட்
என்னுமிடத்தில் இப்ராஹிம்
லோடியை தோற்கடித்தார்.
6.இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண
தண்டனை விதிக்கப்பட்டவர் யார்?
a) குரு அர்ஜூன் தேவ்
b) குருஹர்கோபிந்த்
c) குருதேஜ்பகதூர்
d) குரு
ஹர் ராய்
7.இந்தியாவில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்ட போர்
எது?
a) முதலாம் பானிப்பட்டுப் போர்
b) இரண்டாம்
பானிப்பட்டுப் போர்
c) சந்தேரி
போர்
d) கான்வா
போர்
8.தனது ஆட்சியின்
போது ஜிஸியா வரியை
மீண்டும் விதித்தார் யார்?
a) அக்பர்
b) ஜஹாங்கீர்
c) ஷாஜகான்
d) ஔரங்கப்சீப்
9.“கப்பலின் ஒட்டகம்”
எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல்
அரசர் யார்?
a) அக்பர்
b) ஜஹாங்கீர்
c) ஷெர்ஷா
d) பாபர்
10.தங்கம் மற்றும்
வெள்ளி நாணயங்களை வெளியிட்ட
ஷெர்ஷா அந்த நாணயங்களில் தனது பெயரை எந்த
மொழியில் பொறித்தார்?
a) ஹிந்தி
b) பாரசீகம்
c) தேவநாகரி
d) உருது
11.———–சேர்ந்த தான்சேனை
அக்பர் ஆதரித்தார்
a) ஆக்ராவை
b) குவாலியரை
c) தில்லியை
d) மதுராவை
12.காலவரிசைப்படி போர்களை
வரிசைப்படுத்துக
1) கன்வா போர்
2) செளசா போர்
3) கன்னோசி போர்
4) சந்தேரி போர்
a) 1 4 2 3
b) 1 2 3 4
c) 2 3 4 1
d) 1 3 2 4
13.கீழ்கண்ட எந்த
நூல் ஒரு ஜோதிட
ஆய்வு நூலாகும்?
a) தஜிகநிலகந்தி
b) ரசகங்காதரா
c) மனுசரிதம்
d) ராஜாவலிபதகா
14.பின்வருவனவற்றுள் தவறானது
எது?
a) ஷாஜஹான்
தாஜ்மஹாலைக் கட்டினார்.
b) தாஜ்மஹால்
உஸ்தாத் இஷா என்ற
தலைமைச் சிற்பியின் தலைமையில்
கட்டப்பட்டது.
c) தாஜ்மஹால் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது.
d) மயிலாசனத்தை உருவாக்கி அதில் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்த
பேரரசர் ஷாஜஹான்
15.சரியான கூற்றினைக் கண்டுபிடி.
a) இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
b) அக்பரது
புதிய தலைநகரமான ஆக்ரா
மற்றும் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
c) மோதி
மசூதி முழுவதும் பளிங்குக்
கல்லால் கட்டப்பட்டது.
d) புராண
கிலா ஒரு உயர்ந்த
கோட்டையாகும்.
16.சரியான கூற்றினைக் கண்டுபிடி
a) ஒவ்வொரு
மன்சப்தாருக்கும் 10 முதல்
10,000 வரையிலான படைவீரர்களை கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள்
தீர்மானித்தனர்.
b) ஷெர்ஷாவின் நாணயமுறை, ஆங்கிலேயரின் நாணயமுறைக்கு அடித்தளமிட்டது.
c) முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான
இறுதிப் போர் முறை
ஆகும்.
d) சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த் சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.
17.பின்வருவனவற்றில் சரியான
கூற்றினை கண்டுப்பிடி.
a) ராணா சங்காவின்
மூர்க்கமான வலிமை வாய்ந்த
படைகள் பாபரின் சக்தி
வாய்ந்த படையை எதிர்
கொண்டது
b) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத
ஒரு இளவரசர் ஆனார்.
a) (i) சரி
b) (ii) சரி
c) (i) சரி
(ii) தவறு
d) (i) மற்றும்
(ii) சரியானவை
18.பின்வருவனவற்றில் சரியான
கூற்றினை கண்டுப்பிடி.
(i) ஷெர்ஷா மேற்கில்
உள்ள சிந்து முதல்
வங்காளத்தில் உள்ள
சோனர்கான் வரையிலான கிராண்ட்
டிரங்க் சாலையை சீர்ப்படுத்தினார்
(ii) அக்பர் தனது
மிகப்பெரிய படையெடுப்புகளின் மூலமாக
மாபெரும் பேரரசிற்கு அடித்தளம்
இட்டார்.
a) (i) சரி
b) (ii) சரி
c) (i) மற்றும் (ii) சரியானவை
d) (i) மற்றும்
(ii) தவறானவை
19.கூற்று(A) : பாபர்
முதலாம் பானிபட் போரில்
வெற்றி பெற்றார்.
காரணம் (R) : பாபர்
பீரங்கிப்படையைப் போரில்
பயன்படுத்தினார்.
a) கூற்று சரி : காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
b) கூற்று
தவறு ; காரணம் சரி
c) கூற்று
சரி; காரணமும் தவறு
d) கூற்று
சரி : காரணம் கூற்றின்
சரியான விளக்கம் அல்ல
20.கூற்று(A): ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப்
பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று
காரணம் (R): ஔரங்கசீப்
தக்காண அரசர்களிடம் நட்புறவாக
இருந்தார்
a) கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
b) கூற்று
சரி: காரணம் கூற்றின்
சரியான விளக்கம் ஆகும்
c) கூற்றும்
தவறு: காரணம் சரி
d) கூற்று
சரி: காரணம் கூற்றின்
சரியான விளக்கம் ஆகும்
21.கீழ்க்கண்டவற்றுள் எது
தவறாக பொருத்தப்பட்டுள்ளது.
a)பாஸ்கரசாரியா – நீதிநெறி விளக்கம்
b)ஆமுக்தமல்யதா – கிருஷ்ணதேவராயர்
c)ஜெகநாத பண்டிதர்
– ரசகங்காதரா
d)அல்லசானிபெத்தன்னா – மனுசரிதம்
22.பொருத்துக.
1.அபுல் பாசல் 1)
ஔரங்கப்சீப்
2.ஜும்மா மசூதி 2)
அக்பர்
3.பாதுஷாஹி மசூதி 3) ஷெர்ஷா
4.புராண கிலா 4)
ஷாஜகான்
a) 2,4,3,1
b) 3,2,1,4
c) 3,1,4,2
d) 1,3,2,4
23.இந்தியாவில் பாரசீகக்
கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) ஹூமாயூன்
b) பாபர்
c) ஜஹாங்கீர்
d) அக்பர்
24.அக்பர் ராணா
பிரதாப்பை எந்தப் போரில்
தோற்கடித்தார்?
a) பானிபட்
b) செளசா
c) ஹால்டிகட்
d) கன்னோசி
25.ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
a) பாபர்
b) ஹூமாயூன்
c) இப்ராஹிம்
லோடி
d) ஆலம்கான்
26.மன்சப்தாரி முறையை
அறிமுகப்படுத்தியவர் யார்?
a) ஷெர்ஷா
b) அக்பர்
c) ஜஹாங்கீர்
d) ஷாஜஷான்
27.அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
a) பீர்பால்
b) ராஜா
பகவன்தாஸ்
c) இராஜ தோடர்மால்
d) இராஜா
மான்சிங்
28.பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
A) பாபர் அகமது
நகர்
B) துர்க்காவதி அஷ்டதிக்கஜம்
C) ராணி சந்த்
பீபி அக்பர்
D) தீன் – இலாஹி சந்தேரி
E) இராஜா மன்
சிங் மத்திய
மாகாணம்
a) 4 5 1 3 2
b) 1 2 3 4 5
c) 2 3 4 5 1
d) 3 4 5 1 2
29.கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக
மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம்: ஜஹாங்கீர்
ஆங்கிலேயருக்கு வணிக
உரிமையை வழங்கினார்
a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
b) காரணம்
கூற்றிற்கான தவறான விளக்கம்
c) கூற்று
தவறு காரணம் சரி
d) கூற்று
மற்றும் காரணமும் தவறு
30.கூற்று: ஔரங்கசீப்
மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது
காரணம்: ஔரங்கசீப்
இந்துக்கள் மீது மீண்டும்
ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்
a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
b) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
c) கூற்று
தவறு, காரணம் தவறு
d) கூற்று
மற்றும் காரணம் தவறு