TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
“இந்து தமிழ்”
மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
இதழியலில்
ஆர்வமும், காணொலி எடுப்பதில் திறமையும் உள்ள கல்லூரி
மாணவர்களுக்காக ‘இந்து
தமிழ்‘ மாணவ டிஜிட்டல்
பத்திரிகையாளர் பயிற்சித்
திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, துறை
சார்ந்த நிபுணர்கள் மூலம்
சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல்
24 கடைசித் தேதி ஆகும்.
8 ஆண்டுகளாகத் தமிழ் இதழியலில் தனித்த
அடையாளத்துடன் திகழும்
‘இந்து தமிழ் திசை’
இணையதளம், ஊடகத் துறையில்
கால் பதிக்கத் துடிக்கிற
இளைஞர்களை அடையாளம் கண்டு,
அவர்களை உலகுக்கே அடையாளம்
காட்டும் பணியில் இப்போது
இறங்கியுள்ளது. துடிப்புமிக்க, சேவை குணம் கொண்ட,
உள்ளூர் செய்திகளை உலகுக்கு
எடுத்துரைக்க ஆவல்
கொண்ட இளைஞர்கள் இதற்கு
விண்ணப்பிக்கலாம்.
6
மாத கால மாணவ
டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
- 18 முதல் 25 வயது
வரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே
இந்தத் திட்டம். - கல்லூரி மாணவராக
இருக்க வேண்டியது அவசியம். - உங்கள் ஊர்
அல்லது மாவட்டத்தில் உள்ள
ஏதேனும் ஒரு விஷயத்தை
3 முதல் 5 நிமிட வீடியோவாக்கி, அதற்கான செய்தியை உங்கள்
குரலிலேயே பின்னணியாகப் பதிவு
செய்து, https://www.hindutamil.in/mojo2021
என்ற முகவரியில் பதிவேற்ற வேண்டும். - தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வும் நேர்முகத்
தேர்வும் நடத்தப்படும். - இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 6 மாத
காலம் இதழியல் துறை
முன்னோடிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி
வழங்கப்படும். - பயிற்சிக் காலம்
முடிந்த பிறகு சான்றிதழ்
வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:
24-04-2021
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


