HomeBlogதையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

 

தையல் இயந்திரம்
பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தையல் இயந்திரம்
பெற விண்ணப்பிக்க மாவட்ட
கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது
குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:

தமிழக
அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார்
பொருத்திய தையல் இயந்திரம்
இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கை,
கால் இயக்க குறைபாடு
மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தையல் இயந்திரம்
பெற விண்ணப்பிக்கலாம். மிதமான
மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும்
கடுமையாக பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பொற்றோர்களும் இலவச தையல் இயந்திரம்
பெற விண்ணப்பிக்கலாம்.

தையல்
இயந்திரம் பெற 18 வயது
முதல் 45 வயதிற்குள் உள்ளராக
இருக்க வேண்டும். தையல்
பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்.04362
236791
தொடர்பு கொள்ளலாம். தையல்
இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள
அட்டை நகல், குடும்ப
அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், கல்விச்
சான்று, வயதுச் சான்று,
தையல் பயிற்சி சான்று
புகைப்படம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

தஞ்சை
மாவட்டத்தில் இதுநாள்
வரை தையல் இயந்திரம்
பெறாத மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள்
விண்ணப்பங்களை தஞ்சை
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.14ல்
செயல்பட்டு வரும் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்தில் நேரிலோ
அல்லது அஞ்சல் மூலமாகவோ
விண்ணப்பித்து பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular