வரும் 24, 25ம்
தேதி குரூப் 7ஏ
தேர்வு இணையதளத்தில் ஹால்
டிக்கெட் வெளியீடு
வருகிற
24,25ம் தேதி நடைபெற
உள்ள குரூப் 7ஏ
தேர்வுக்கான ஹால் டிக்கெட்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக TNPSC தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்
குராலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட
அறிவிப்பு குரூப் 7 ‘ஏ‘
பணியில் அடங்கிய செயல்
அலுவலர், கிரேடு 1 பதவிகளுக்கான எழுத்து தேர்வு வருகிற
23ம் தேதி(முற்பகல்
மற்றும் பிற்பகல்) மற்றும்
24ம் தேதி(முற்பகல்
மட்டும்) நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in
மற்றும் www.tnpscexams.in
ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒரு முறை
பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக
மட்டுமே விண்ணப்ப எண்
மற்றும் பிறந்த தேதியை
உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


