தமிழகத்தில் 8ம்
வகுப்பு தனித்தேர்வர்களுக்கான Hall Ticket வெளியீடு
எட்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்த
ஆண்டு 8ம் வகுப்பு
பொதுத்தேர்வானது வரும்
08.11.2021 அன்று தொடங்கவுள்ளது. இந்த
தேர்வை எழுத ஆன்லைன்
மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு நுழைவுச்
சீட்டை நாளை முதல்
ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்
என அரசுத் தேர்வுகள்
இயக்ககம் தெரிவித்துள்ளது.
08.11.2021 அன்று
தொடங்கவுள்ள எட்டாம் வகுப்பு
தனித்தேர்வு எழுத அரசு
தேர்வுத் துறையின் சேவை
மையங்களில் ஆன்லைன் மூலமாக
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல்
2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள்
இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
இணையதளத்தில் Hall Ticket என்பதனை கிளிக்
செய்ய வேண்டும். அங்கு
ESLC – NOVEMBER 2021 EXAMINATION – CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற
தலைப்பின் கீழ் டவுன்லோட்
Button இருக்கும். அதை
கிளிக் செய்த பின்
தோன்றும் பக்கத்தில் தங்களது
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை பதிவு
செய்தால் ஹால் டிக்கெட்
திரையில் தோன்றும். அதன்
பின் தேர்வர்கள் அதை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Hall Ticket இல்லாத தேர்வர்கள் தேர்வு
எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


