Home News latest news காவலர் உடல் திறன் சோதனை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

காவலர் உடல் திறன் சோதனை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

0
காவலர் உடல் திறன் சோதனை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
காவலர் உடல் திறன் சோதனை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

காவலர் உடல் திறன் சோதனை தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

நாமக்கல்லில், காவலா் உடல்திறன் சோதனைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

காவலா் பதவிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல்திறன் சோதனைத் தேர்வில் வெற்றி பெற உரிய வகையில் உடற்தகுதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், ஆட்சியா் அலுவலக விளையாட்டுத் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப்.8-ஆம் தேதி காலை 6.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் இப்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரத்தை 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ நேரிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version