Wednesday, August 13, 2025
HomeBlogதெரிந்துகொள்ளுங்கள்... ரயில் பயணிகள் டிக்கெட் ரத்து செய்தால் அபராத தொகைக்கும் GST வசூலிக்கப்படும்

தெரிந்துகொள்ளுங்கள்… ரயில் பயணிகள் டிக்கெட் ரத்து செய்தால் அபராத தொகைக்கும் GST வசூலிக்கப்படும்

ரயில் பயணிகள்
டிக்கெட் ரத்து செய்தால்
அபராத தொகைக்கும் GST வசூலிக்கப்படும்

ரயில்
போக்குவரத்தை மேற்கொள்ள
பல்வேறு வசதிகள் அரசு
தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்
சில அதிர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை விழிப்பிதுங்கச் செய்வதிலும் தவறுவதில்லை.

அந்த
வகையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான
பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக
வசூலிக்கப்படும். தற்போது
அதற்கு GST.யும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்வதென்பது அதன் சேவையை பெறுவதற்கான ஒப்பந்தம் போன்றது.

அதற்கான
டிக்கெட் உறுதியான போதும்
அதனை ரத்து செய்வதால்
ரயில் சேவையை வழங்கும்
IRCTC
நிறுவனத்துக்கு இழப்பீடாக
இதுவரை கேன்சல் கட்டணம்
வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி அதற்கு 5 சதவிகிதம்
ஜி.எஸ்.டியும்
சேர்த்து வசூலிக்கப்படும்.

அதாவது,
ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி
வகுப்பில் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன்
கேன்சல் செய்யப்பட்டால் வழக்கமாக
பிடிக்கப்படும் 240 ரூபாயுடன்
5%
ஜி.எஸ்.டி.
சேர்த்து 252 ரூபாய வசூலிக்கப்படும்.

அதேபோல
செகண்ட் கிளாஸ் ஏசி
கோச் டிக்கெட்டாக இருந்தால்
ரூ.200+5%, மூன்றாம்
வகுப்பு ஏசியாக இருந்தால்
ரூ.180+5% என சேர்த்து
ரத்து கட்டணம் வசூலிக்கப்படுமாம். ஆனால் 2nd ஸ்லீப்பர்
மற்றும் இருக்கை வகுப்பு
டிக்கெட்டை ரத்து செய்தால்
ஜி.எஸ்.டி
வசூலிக்கப்படாது என்றும்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments