Sunday, December 8, 2024
HomeBlogகுறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பு
- Advertisment -

குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பு

Growing mushrooms with low investment

குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பு

குறைந்த முதலீட்டில்
அதிக லாபம் தருவதில் சிறந்து விளங்கும் ஒரு தொழில் காளான் வளர்ப்பு தான்.

காளான் வளர்க்கத் தேவையானவை:

16 அல்லது
18 சதுர மீட்டர் இடம்

பாலித்தின்
பை

வைக்கோல்

தண்ணீர்

காளான் வளர்ப்பு முறை:

முதலில் 16
அல்லது 18 சதுர மீட்டர் இடம் (குடிசை அல்லது ரூம்) தயார் செய்ய வேண்டும்.

வைக்கோலில்
உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கொதிநீரில் வைக்கோலை முக்கி சுத்தம்
செய்ய வேண்டும் அல்லது இரசாயனம் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம்.

12-24 என்ற
அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 05 செ.மீ. அளவு நிரப்ப வேண்டும். பின்பு
காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் ஓரத்தில் தூவ வேண்டும். (குறிப்பு:
காளான் விதைகள் உற்பத்தியாளர்களிடமோ அல்லது அங்காடி கடைகளிலோ கிடைக்கும்.)

இதுபோல் மாறி
மாறி 07 முதல் 08 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 03 துனைகள் வீதம் நான்கு
பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும்.

பின்பு குடிலின்
மையத்தில் தயார் செய்து வைத்த பாலித்தின் பைகளை கட்டித் தொங்க விட்டு தினமும் தண்ணீரை
பாலித்தின் கவரை சுற்றி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்தால் 10வது நாளில் காளான்
விதைகள் வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம்.

பின்பு 27ஆம்
நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 03 நாட்களில் அறுவடை செய்து விற்பனை
செய்ய வேண்டும். ஒரு மாதந்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்தால் 3 லட்சம்
ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -