HomeBlogவிரால் மீன் வளர்த்து அதன் மூலம் லாபம் பெற முடியும்

விரால் மீன் வளர்த்து அதன் மூலம் லாபம் பெற முடியும்

விரால் மீன்
வளர்த்து அதன் மூலம்
லாபம் பெற முடியும்

இனங்கள்:

  • விரால் மீன்களின்
    தலை பாம்பின் தலையைப்போன்ற தோற்றமுடையது. அவை
    பாம்புத் தலை மீன்
    என அழைக்கப்படுகிறது. இவை
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
    வங்காளதேசம், நேபாளம், பர்மா,
    தாய்லாந்து, சீனா, வியட்நாம்,
    கம்போடியா போன்ற நாடுகளில்
    பரவி உள்ளன.
  • விரால் மீன்
    இனங்களில் நமது நாட்டில்
    மட்டும் உள்ளினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வளர்ப்புக்கு இரண்டு
    உள்ளினங்கள் மிகவும் முக்கியமானவை. அவை சன்னா மரூவியஸ்
    (
    ராட்சத விரால்), சன்னா
    ஸ்ட்ரையேட்டஸ்.

விரால் மீன்
வளர்க்க குட்டை அளவு:

  • 10 சென்ட் நிலத்தில்
    1.5
    மீட்டர் ஆழத்திற்கு குழி
    எடுக்க வேண்டும். அந்த
    குழியில் இருந்து எடுக்கும்
    மண்ணைக் கொண்டே கரை
    அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • மழைக்காலத்தில் மழைநீர்
    இந்த குட்டையில் வந்து
    தேங்கும்படி கால்வாய் அமைத்துக்
    கொள்ள வேண்டும். வீட்டில்
    பயன்படுத்தப்படும் கழிவுநீரும் குட்டைக்கு வந்து சேரும்படி
    அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • மழைக்காலங்களில் குட்டைக்கு நீர் அதிகம் வரும்
    போது எதிர் தண்ணீரில்
    மீன்கள் தப்பி செல்லாமல்
    இருக்க குட்டையை சுற்றி
    வளை அமைக்க வேண்டும்.
  • சூட்டையில் எப்போதும்
    4
    அடி அளவிற்கு நீர்
    நிரம்பியிருக்கும் வகையில்
    போதிய அளவு தண்ணீர்
    வசதி இருக்க வேண்டும்.
    வாழை போன்ற பொருளாதாரப் பயன்தரும் மரங்களை குளக்கரையின் ஓரங்களில் வளர்ப்பது நல்லது.

சந்தை:

மக்களிடையே விரால்
மீனுக்கு வரவேற்பு அதிகம்.
விரால் மீன்களின் சுவை
தனித்து காணப்படுவதே இதற்கான
காரணம் எனலாம். அதனால்
விரால் மீன்களுக்கு சந்தையில்
நல்ல விலை உள்ளது.

உணவு:

  • குளங்களில் வளர்க்கப்படும் விரால் மீன்களுக்கு என்று
    தனியாக ஊட்டச்சத்து மிகுந்த
    அடர்தீவனம் விற்பனை செய்யப்படுகின்றன. குளத்தின் மேல்
    கூண்டு அமைத்து கோழி,
    முயல், புறா, வான்கோழிகளை வளர்த்தால் அவற்றின் எச்சம்
    இந்த குளத்தில் விழும்.
    அந்த எச்சம் மீன்களுக்கு உணவாகும்.
  • அதுமட்டுமன்றி கொசு
    ஒழிப்பு மீன்கள், திலேப்பியாக் குஞ்சுகள், சிறுங்கெண்டைகள், தவனையின்
    தலைப்பிரட்டைகள், மண்புழுக்கள், இரத்தப் புழுக்கள், தேவதை
    இறால்கள், நெத்திலிக் கருவாடு
    துண்டுகளாக வெட்டப்பட்ட கழிவு
    மீன்கள், கோழிக் குடல்கள்
    மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை உணவாக தரலாம்.
  • விரால் வளர்ப்பில் உணவும் உணவிடலும் மிக
    மிக முக்கியம். அவற்றின்
    உணவுத் தேவையை தினமும்
    நிறைவு செய்ய வேண்டும்.
    காலை 7 மணி, மாலை
    5
    மணி என்ற அளவில்
    உணவிடலாம்.
  • மீன் வளர்ப்பின் போது மாதம் ஒரு
    முறை மாதிரி மீன்
    பிடிப்பு நடத்தி மீன்கள்
  • பெற்றிருக்கும் சராசரி
    வளர்ச்சியை அறிய வேண்டும்.
    ஒவ்வொரு மாதமும் குனத்தில்
    அதிகரிக்கும் மீன்களின்
    மொத்த எடைக்கு ஏற்ப
    உணவின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.
  • மாட்டு சாணமும்
    மீன்களுக்கு உணவாக அளிக்கலாம். சரியான பராமரிப்பு இருந்தால்
    குட்டை வளர்ப்பில் விரால்
    மீன்கள் 4 மாதத்தில் 1 கிலோ
    எடை வளரும். இன்றைக்கு
    சந்தையில் 1 கிலோ 400 முதல்
    450
    ரூ. வரை விற்கப்படுகிறது. குளத்தில் இடப்படும் மீன்
    குஞ்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் வருமானமும் கிடைக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular