HomeBlogகுரூப் 1 சான்றிதழ் பதிவேற்றம்-டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 சான்றிதழ் பதிவேற்றம்-டிஎன்பிஎஸ்சி

 

குரூப் 1 சான்றிதழ்
பதிவேற்றம்டிஎன்பிஎஸ்சி

குரூப்
1
பதவிகளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்புக்கும் மற்றும்
முதன்மை எழுத்துத் தோ்வுக்காகத் தற்காலிகமாகத் தோ்வு
செய்யப்பட்டவா்கள் சான்றிதழ்களைத் தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் குறித்து டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெளியிட்ட செய்தி:

சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் முதன்மை
எழுத்துத் தோ்வுக்காகத் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டவா்கள் தங்களது
அசல் சான்றிதழ்களை  ஸ்கேன் செய்து
தோ்வாணைய இணையதளத்தில் அரசு
கேபிள் டிவி நடத்தும்
அரசு சேவை
மையங்கள் மூலமாக பிப்.16
செவ்வாய்க்கிழமை முதல்
மார்ச் 15-ஆம் தேதி
மாலை 5.45 மணிக்கு முன்னதாக
பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய
ஆதார் எண்ணை ஒரு
முறை பதிவேற்றத்தில்  இணைத்தால் மட்டுமே
அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

அதேபோன்று
முதன்மை எழுத்துத் தோ்வுக்குத் தோ்வுக்கட்டண விலக்குக்
கோராத விண்ணப்பதாரா்கள் அனைவரும்
ரூ.200 கட்டணத்தை மார்ச்
15-
ஆம் தேதிக்குள் செலுத்த
வேண்டும். தவறினால் அவா்களின்
விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் மார்ச் 15-ம்
தேதிக்குள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவில்லை என்றாலும் அவா்களின்
விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular