HomeBlogதமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - பெரம்பலூர்

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – பெரம்பலூர்

தமிழக அரசின்
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகைபெரம்பலூர்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி
வருகிறது. தமிழக அரசை
பொறுத்தவரையில் படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும்
படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள்
என அனைவருக்கும் வெவ்வேறு
தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வி
ஊக்கத்தொகை வழங்குகிறது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு
மூப்பு அடிப்படையில் உதவித்தொகை வழங்குகிறது. படிக்காத 60 வயதுக்கு
மேற்பட்ட முதியவர்களுக்கு OAP
என்பதன் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும்
படித்த மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்குகிறது. இவ்வாறாக ஆண்டு
தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை
10-
ஆம் வகுப்பில் தோல்வி
அடைந்தவர்கள் உட்பட
டிகிரி முடித்தவர்கள் வரை
ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதற்கு
விண்ணப்பிப்பதற்கு பல்வேறு
தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை,
employment renewal 5
வருடங்கள் முடிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 40 வயது நிறைந்தவராக இருத்தல்
அவசியம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற
மற்ற பிரிவினருக்கு 48 வயது
நிரம்பி இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் 72 ஆயிரம்
வரை மட்டுமே இருத்தல்
வேண்டும். மேலும் முக்கியமான தகுதி விண்ணப்பதாரர் தனியார்
மற்றும் பிற அரசுசாரா
நிறுவனங்கள் என எவ்வித
வேலையும் பார்க்க கூடாது.
உதவித்தொகையானது 10 ம்
வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.100, 10 மற்றும்
12
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.400,
எந்த டிகிரி முடித்திருந்தாலும் ரூ.400 மாற்றுத்
திறனாளிகளுக்கு ரூ.600
முதல் 1000 வரை வழங்கப்படும்.

இத்தகைய
உதவித்தொகையானது மாதந்தோறும் முதல்
15
தேதிகளில் விண்ணப்பதாரரின் வாங்கி
கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

தற்போது
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை
ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.30-ம்
தேதி வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என
அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular