Thursday, August 14, 2025
HomeBlogஇந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் கல்வி உதவித்தொகை

இந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் கல்வி உதவித்தொகை

 

இந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் கல்வி
உதவித்தொகை

இஸ்ரேலில்
உள்ள கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய
கால கல்வி பெற
விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, இஸ்ரேல் அரசாங்கம் கல்வி
உதவித்தொகை திட்டத்தை வழங்குகிறது.

உதவித்தொகை திட்டம்:

8 மாதகால
ஆராய்ச்சி மற்றும் 3.5 வாரகால
கோடை கால படிப்புகள் என இரண்டு பிரிவுகளில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பாடப்பிரிவுகள்:

கம்பேரிட்டிவி ஸ்டடீ ஆப் ரிலிஜியன்ஸ், மிடில் ஈஸ்ட் ஸ்டடீஸ்,
ஹிப்ரு லேங்குவேஜ் அண்ட்
லிட்ரெச்சர், ஹிஸ்ட்ரி ஆப்
ஜுவிஷ் பீப்புல், அக்ரிகல்ச்சர், பயோலஜி, பயோடெக்னாலஜி, எக்னாமிக்ஸ், பிசினஸ் மேனேஜ்மெண்ட், மாஸ்
கம்யூனிகேஷன், என்விரான்மெண்ட் ஸ்டடீஸ் மற்றும் கெமிஸ்ட்ரி.

தகுதிகள்:

இஸ்ரேல்
கல்வி நிறுவனங்களிடம் இருந்து
படிப்பிற்குரிய அனுமதி
கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய குடிமகனாக இருத்தல்
அவசியம். இதுநாள் வரை,
இஸ்ரேல் அரசின் வேறு
எந்த உதவித்தொகை திட்டத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவும் எந்த அயல்நாடுகளிலும் வசித்திருக்கக் கூடாது.
ஆங்கிலம் அல்லது ஹிப்ரு
மொழியில் புலமை பெற்றிருத்தல் அவசியம்.

வயது: 35

பயன்கள்:

8 மாதகால
உதவித்தொகை திட்டத்தின் கீழ்,
இஸ்ரேல் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தில், முழு
மற்றும் பாதி கல்விக்
கட்டணத்தை உதவித்தொகையாக இஸ்ரேல்
அரசாங்கம் வழங்குகிறது. இதன்படி,
கல்விக்கட்டணத்தில் அதிகபட்சம் 12 ஆயிரம் அமெரிக்க டாலர்
வரையிலான உதவித்தொகை, மருத்துவ
காப்பீடு, 8 மாதங்கள் வரையில்
மாத உதவித்தொகையாக மொத்தம்
850
அமெரிக்க டாலர் ஆகியவை
இந்த திட்டத்தின் கீழ்
வழங்கப்படுகிறது.குறுகிய
கோடை கால படிப்புகளுக்கு, முழு கல்விக் கட்டண
விலக்கு, தங்குமிடம், அடிப்படை
மருத்துவ காப்பீடு, 3 வார
கால செலவீனங்களுக்கான உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

குறிப்பு: விமானக் கட்டணம்,
தங்கும் செலவு ஆகியவை
இத்திட்டத்தில் அடங்காது.

விண்ணப்பிக்கும் முறை: http://proposal.sakshat.ac.in/scholarship/
எனும் இணையதளம் வாயிலாக
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச்
29

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments