Sunday, August 10, 2025
HomeBlogமாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை

Government jobs through special selection for the alternatively abled

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு மூலம்
அரசு வேலை

அரசுப்
பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள 1,095 பணியிடங்களுக்கு, சிறப்பு தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள் என்று
அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பேரவையில் கேள்வி நேரத்தில் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் .அப்துல்சமது பேசும்போது:மாற்றுத்
திறனாளிகளுக்கு அரசுப்
பணியில் 4 சதவீத இட
ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட, அவர்களுக்கான பணியிடங்களை முதலில்கண்டறிய வேண்டும்.
தனியாகமுழுநேர ஆணையம்
அமைக்கவேண்டும். பள்ளி,
கல்லூரி உள்ளிட்ட அனைத்து
நிறுவனங்களிலும் பணியிடங்களை கண்டறிந்துமாற்றுத் திறனாளிகளை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து சமூகநலத் துறை அமைச்சர் பேசியதாவது:

மாற்றுத்
திறனாளிகள் உரிமை சட்டப்படி,
அவர்களுக்கு 4 சதவீத இட
ஒதுக்கீட்டின்படி பணிகள்
வழங்கப்படுகின்றன. அரசுப்
பணிகளில் சி,டி
பிரிவில் அனைத்து பணியிடங்களும் மாற்றுத் திறனாளிகளுக்குஉகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ,பி
பிரிவில் 559 பணியிடங்கள் மாற்றுத்
திறனாளிகளுக்கு உகந்தவை
என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,
தற்போது அரசுப்பணிகளில் மாற்றுத்
திறனாளிகளுக்கான 1,095 பின்னடைவு
பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு சிறப்பு தேர்வு நடத்தவேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அப்பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments