முதலமைச்சரின் விரிவான
காப்பீட்டு திட்டத்துக்கான வருமான
வரம்பை உயர்த்தி அரசாணை
வெளியீடு
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரம்பு 1 லட்சத்து
20 ஆயிரமாக உயர்த்தி தமிழக
அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணம்
இல்லாமல் ஏழை மற்றும்
குறைந்த வருவாய் உடையவர்கள் அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் பெற
வேண்டும் என்ற உயரிய
நோக்குடன் முதல்வர் கலைஞரின்
காப்பீட்டு திட்டம் தமிழக
அரசால் 2009 ஆம் ஆண்டு
ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ்
ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்திற்கும் ஒரு லட்சம்
வரை இலவசமாக சிகிச்சை
பெற காப்பீடு செய்யப்பட்டது.
காப்பீடு
திட்டத்தின் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
திட்டம் கடந்த 2012 ஆம்
ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி
மக்கள் நல்வாழ்வு மற்றும்
குடும்ப நலத் துறை
கடந்த 2011-இல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது வரை ஆண்டு
வருமான வரம்பில் எந்தவித
மாற்றமும் இன்றி தொடர்ந்து
செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீடு திட்டத்துடன் பிரதான் மந்திரி ஜன்
அரோக்ய யோஜன என்ற
திட்டத்தை ஒருங்கிணைத்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு
தளங்களில் இருந்து பெறப்பட்ட
கோரிக்கை மற்றும் கருத்தின்
அடிப்படையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
திட்டத்தில் தற்போது வரையறுக்கப்பட்டுள்ள, குடும்ப ஆண்டு
வருமானம் 72,000 ஆக உள்ளதை
1,20,000 ஆக உயர்த்தலாம் என
தமிழ்நாடு சுகாதார திட்ட
இயக்குனர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டார், அதன்படி
தமிழ்நாடு சுகாதார திட்ட
இயக்குனரின் கருத்தை அரசு
நன்கு பரிசீலனை செய்து
வருகிற 2022 ஜனவரி 11-ம்
தேதி முதல் புதிதாக
நீட்டிக்கப்பட உள்ள
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கான குடும்ப
ஆண்டு வருமான வரம்பை
72 ஆயிரத்திலிருந்து ஒரு
லட்சத்து 20 ஆயிரம் ஆக
உயர்த்தி அரசு ஆணை
வெளியிடப்பட்டு உள்ளது.