அரசு திரைப்பட- தொலைக்காட்சி பயிற்சி நிறுவன சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே கோரப்பட்டிருந்தன. இதற்கான கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய ஜூன் 5-ஆம் தேதி வரையிலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பை அரசின் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow