தங்க நகை
மதிப்பீட்டாளா் பயிற்சி
பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய
பனைப் பொருள்கள் நிறுவனம்
(கேவிஐசி) சார்பில் அளிக்கப்படும் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சியைப் பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய
பனைப் பொருள்கள் நிறுவனம்
(கேவிஐசி) சார்பில், வேலூரில்
பெல்லியப்பா ஹால், முதல்
தளம், ராஜா திரையரங்கு எதிரில், (வருமான வரித்
துறை அலுவலகம் அருகில்)
ஆபீசா் லைனிலுள்ள பயிற்சி
நிலையத்தில் தங்க நகை
மதிப்பீட்டாளா் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மார்ச்
29ல் தொடங்கி ஏப்ரல்
7ம் தேதி வரை
10 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும்
முறை, உரை கல்லில்
தங்கத்தின் தரம் அறிதல்,
கடன் தொகை வழங்கும்
முறை, ஹால்மார்க் தரம்
அறியும் விதங்கள் குறித்து
பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சிக்
கட்டணம் ஜிஎஸ்டியுடன் சோத்து
ரூ. 6,254 செலுத்த வேண்டும்.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்,
பெண் இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. கல்வித்
தகுதி குறைந்தது 8-ஆம்
வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில்
மத்திய அரசு சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சி
முடித்தவா்கள் தேசிய
கூட்டுறவு, தனியார் வங்கிகள்,
நகை அடகு நிதி
நிறுவனங்களிலும், நகை
மதிப்பீட்டாளாராகவும் பணியில்
சேரலாம். சுயமாக நகைக்
கடை, நகை அடமான
கடை நடத்தவும் தகுதி
பெறுவா்.
மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 2 புகைப்படம், முகவரிச் சான்றிதழ், கல்வி
சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில்
வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 94437 28438 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.