திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், தர்மபுரியில், வாசுகவுண்டர் வீதியிலுள்ள, சாந்தி ஹார்-டுவேர் எதிரில், செந்தில்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகி-லுள்ள, இ.பி.ஆர்., எஜூகேஷன் பாயின்ட், 7வது மாடியிலுள்ள பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்-கப்படுகிறது.
வரும், ஆக., 28-ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படு-கின்றன.பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் பங்-கேற்கலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி.
பயிற்சி முடிவில் இந்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம். மேலும், சுய-மாக நகைக்கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டா-ளாராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்-சியில் சேர விரும்புவர்கள், 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முக-வரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணமாக, 7,500 ரூபாய், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் உட்பட, 8,850 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்கள் பெற, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

