
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி வரும் வியாழக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது.
இது குறித்து கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், தலைவருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் வரும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில், ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0421–2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

