HomeBlogஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறையும்

ஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறையும்

 

ஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல்
விலை குறையும்

வாரணாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலிய துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
கச்சா எண்ணெய் உற்பத்தி
செய்யும் நாடுகளான ரஷ்யா,
கத்தார் மற்றும் குவைத்திடம், உற்பத்தியை அதிகரிக்க இந்தியா
அழுத்தம் கொடுத்துவருவதாகவும், உற்பத்தி
அதிகரிக்கும் பட்சத்தில் சில்லறை எரிபொருள் விலையும்
குறையும்.

கொரோனா
தொற்று பரவலால் கடந்த
ஆண்டு ஏப்ரல் மாதம்
முதல், எண்ணெய் உற்பத்தி
செய்யும் முக்கிய நாடுகள்
உற்பத்தியை குறைத்தன. அதிக
லாபம் ஈட்டுவதற்காகவே உற்பத்தியை குறைத்ததாக கூறப்படுகிறது.   

அதிகமாக
உற்பத்தி செய்யப்படும்போது கொரோனா
தொற்றுக்கு முன்னர் இருந்ததை
போன்று எரிபொருள்களின் விலை
குறைய வாய்ப்புள்ளது.

இதனால்
எண்ணெய் உற்பத்தி செய்யும்
நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது. எனவே
சமையல் எரிவாயு, டீசல்
மற்றும் பெட்ரோல் விலை
மார்ச் அல்லது ஏப்ரல்
மாதத்திற்குள் குறையக்கூடும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர்
பெட்ரோல் விலை ரூ.100-
தொட உள்ளது. ஒரு
சில வட மாநிலங்களில் ரூ.100- தாண்டி
விற்பனையாகிவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular