
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி சாா்பில் ஆடை உற்பத்தி பயிற்சியானது ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி இணைந்து பகுதிநேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. இதில், அப்பேரல் மொசன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டா்ன் மேக்கிங், ஒவா்லாக், பிளாட்லாக், சிங்கா் அடங்கிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்து பகுதிநேர பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளா் மணியன் கூறியதாவது:
திருப்பூா் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளா்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்த பகுதிநேர பயிற்சி வகுப்பில் ஆடை உற்பத்தி சாா்ந்த அனைத்து நுற்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன. இதனால் ஆடை உற்பத்தியில் தவறுகள் தவிா்க்கப்படும். அதிக ஊதியத்தில் நல்ல வேலைவாய்ப்பு பெருவதன் மூலமாக தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்தப் பயிற்சி வகுப்பானது ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், புதிய தொழில் முனைவோா், வேலையில்லாத பட்டதாரிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் 78451–84962, 95979–14182 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

