TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
1 முதல் 12 ஆம்
வகுப்பு வரை பள்ளிகள்
முழுநேரமும் செயல்படும்–புதுச்சேரி
புதுச்சேரியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு
வரை உள்ள பள்ளிகள்
முழுநேரம் செயல்பட அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. மேலும்
அடுத்த வாரம் முதல்
மதிய உணவு வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்
கடந்த October மாதம்
9 மற்றும் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு சந்தேகம்
தீர்க்கும் வகுப்புகளாக தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஜனவரி 4 ஆம்
தேதி முதல் 1 முதல்
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால்
விருப்பப்பட்ட மாணவர்கள்
மட்டுமே பள்ளிக்கு வரலாம்
என தெரிவித்திருந்தனர்.
ஜனவரி
மாதம் 18 ஆம் தேதி
முதல் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டு காலை
9.30 மணி முதல் மதியம்
12.30 மணி வரை வகுப்புகள் நடைபெற்றன. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.
பள்ளிகள்
திறந்த போதிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்
திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை. அதே
போல கருணாநிதி பெயரிலான
காலை சிற்றுண்டி திட்டமும்
துவங்கவில்லை.
இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
ருத்ர கவுடு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை
மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆலோசனை
கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன்படி தற்போது பள்ளிகள்
காலை 9.30 முதல் மதியம்
12.30 வரை மட்டுமே நடைபெறுகிறது.
மதிய
உணவு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதும் பள்ளிகள்
முழுநேரம் செயல்படும். அடுத்த
வாரம் முதல் பள்ளிகளில் மதிய உணவு திட்டம்
மீண்டும் கொண்டுவரப்பட உள்ளதாக
புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.