சிப்பெட் – இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, திருவிக இன்டஸ்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை – 32ல் சேர்க்கை நடைபெறுகிறது.
வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி. குறைந்த இடங்களே உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பயிற்சி M/s. Power Finance Corporation Limited (PFC), New Delhi, 2021-22 ஆண்டிற்கான கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
பயிற்சியின் பெயர் – மெஷின் ஆபரேட்டர் – பிளாஸ்டிக் பிராசசிங், பயிற்சியின் காலம் – 6 மாதங்கள், கல்வி தகுதி – 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை எண்ணிக்கை – 27 (உண்டு, உறைவிடம் முறையில்), வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம். (இந்திய அரசின் தற்போதைய விதிகளின் படி திறன் மேம்பாட்டுப் பயிற்சியின்படி வயது தளர்வு அளிக்கப்படும்) இதற்கான பயிற்சி கட்டணம், சீருடை, பயிற்சி உபகரணங்கள்,
கையேடு, உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக வழங்கப்படும்
இத்திறன் பயிற்சியில் SC / ST / OBC / PWD / EWS / BPL பிரிவை சார்ந்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் சேர்க்கை தேர்வு – ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த குறைந்த வருமானம், சமூக, கல்வி பொருளாதார ரீதியான பின் தங்கிய பிரிவு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.
கலந்தாலோசனை மற்றும் நேர்காணலுக்கு வரும்போது, கல்வித்தகுதி சான்றிதழ். கல்வி மாற்று சான்றிதழ், சாதி சானிறிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் – 5 Nos. ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் வரவேண்டும். பயிற்சி துவங்கும் நாள் 20.02.2023
மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் : 9600254350, 9841126296
Email: vtc-chennai@cipet.gov.in
தாட்கோ பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சார்பில், பன்னாட்டுநிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற Aspiring Minds Computer Adaptive Test பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். இதற்கான செலவினங்கள் தாட்கோவால் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.