வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி
அவனியாபுரத்தில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், சுபம் அறக்கட்டளை சார்பில் கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிப்பது குறித்து 26 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். திட்ட அறிக்கை தயார் செய்தல், சந்தைப்படுத்துதல், தொழில் யுக்திகள் குறித்து சிறப்பு வகுப்பு நடைபெறும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
மானியத்துடன் வங்கி கடன் பெற உதவி செய்யப்படும். விரும்புவோர் 97891 71651ல் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி தெரிவித்தார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow