ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில், பல்வேறு சமூக பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றத்துடன் இணைந்து, ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம், வரும், 25, 26ல் நடக்கவுள்ளது.
இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள், துறைத்தலைவர், உயிர்தொழில் நுட்பவியல் துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ராசிபுரம் என்ற முகவரிக்கும், 9894689809 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.