சிவில்
சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி
வழங்க, தமிழக அரசு
பயிற்சிமையம் ஏற்பாடு
செய்துள்ளது.
இது
தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் டைரக்டர் ஜெனரலுமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழக
அரசின் அகில இந்திய
குடிமைப் பணித் தேர்வுப்
பயிற்சிமையம் சென்னை
ராஜா அண்ணாமலைபுரம் பசுமை
வழிச்சாலையில் செயல்பட்டு வருகிறது. மத்தியஅரசு பணியாளர்
தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி)
நடத்தப்படும் அகில
இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ்)
முதல்நிலைத் தேர்வில்தமிழக இளைஞர்கள்
கலந்துகொள்ள ஏதுவாக இந்த
பயிற்சிமையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி
அகில இந்தியகுடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன்
வகுப்புகள் பிப்.8ம்
முதல் பின் வரும்
அட்டவணையின்படி நடைபெற்று
வருகின்றன.
காலை
10.15 மணி முதல் 11.30 மணி
வரை – முதல் பாட
நேரம். காலை 11.45 மணி
முதல் மதியம் 1 மணி
வரை – இரண்டாவது பாட
நேரம். பிற்பகல் 2 மணி
முதல் 3.15 மணி வரை
– மூன்றாவது பாட நேரம்.
பிற்பகல் 3.30 மணி முதல்
4.45 மணி வரை – நான்காவது
பாட நேரம்.
முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய வரலாறு, தேசிய
விடுதலைப் போராட்டம், புவியியல்,
அரசியல், பொருளாதாரம், அறிவியல்,
சுற்றுச்சூழல், நடப்பு
நிகழ்வுகள் ஆகியவை தொடர்பான
பாடங்கள் நடந்து வருகின்றன.
எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள்
இவ்வாய்ப்பை பயன்படுத்தி நேரடி
இணைய வழி வகுப்பு
மற்றும் ‘AICSCC
TN’ என்ற Youtube பக்கம்
மூலமாகவும் படித்து பயன்பெறலாம்.
நேரடிப்பயிற்சி பெற முடியாதவர்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பார்த்தும் கேட்டும் பயன்பெறவே
இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தவசதியை பணிக்குச்
செல்பவர்களும் பிற
மாநிலங்களில் வசிக்கும்தமிழர்களும் தங்கள் ஓய்வு
நேரத்தில் பார்த்தும் பயனடைய
முடி யும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


