HomeBlogஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

ஈரோட்டில் கோழி வளர்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக, கனரா வங்கி பயிற்சி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்
சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையத்தில்,
இலவச
கோழி
வளர்ப்பு
பயிற்சி,
ஜனவரி
19
ஆம்
முதல்
31
ஆம்
தேதி
வரை
10
நாட்கள்
நடைபெறுகிறது.
இந்தப்
பயிற்சியில்
ஆண்,
பெண்
என
இருபாலரும்
பங்கேற்கலாம்.

இந்த இலவச பயிற்சியில் கிராம பகுதியை சேர்ந்தவர்கள்,
100
நாள்
வேலை
திட்டத்தில்
பணி
செய்வோர்,
அவர்களது
குடும்பத்தார்,
விவசாயிகள்,
இளைஞர்கள்,
பெண்கள்,
மகளிர்
குழுவினரில்,
18
வயது
முதல்
45
வயது
வரை
உள்ள
தமிழில்
எழுதப்
படிக்கத்
தெரிந்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை
தவிர
மற்ற
நாள்களில்
தினமும்
காலை
9.30
முதல்
மாலை
5.30
மணி
வரை
பயிற்சி
வழங்கப்படும்.
பயிற்சியின்
போது
மதிய
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.

பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெறுவோருக்கு
சான்றிதழ்
மற்றும்
தொழில்
தொடங்க
வங்கிக்கடன்
ஆலோசனை
வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் கோழி வளர்க்கும் முறை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, கோழி குஞ்சுகளை பராமரிக்கும்
முறை,
இனப்பெருக்க
மேலாண்மை
மற்றும்
நோய்த்
தடுப்பு
முறைகள்
குறித்து
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர்
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2 ஆம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு – 638002″
என்ற
முகவரியில்
நேரில்
சென்று
விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு
0424-2400338,
7200650604 , 8778323213
என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular