திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தில் செப். 21 ஆம் தேதி நடைபெறவுள்ள அசோலா வளா்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம்.
அசோலா என்பது நீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சோந்த தாவரமாகும். அசோலாவை கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுத்தலாம். அசோலாவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கும்போது அவற்றின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல முறையில் சினை பிடிக்கும்.
பாலின் அளவும் தரமும் அதிகமாகும். இயற்கை உயிா் உரங்கள் தயாரிக்கவும் அசோலாவைப் பயன்படுத்தலாம். எனவே, அசோலா வளா்ப்பை சுய தொழிலாகச் செய்து வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் குறித்த செயல்முறை விளக்க தொழில்நுட்ப பயிற்சியில் ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோா், இணைப் பேராசிரியா் சி.ராஜாபாபுவை 0431-2962854 அல்லது 91717-17832 ஆகிய எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை, செப்.20 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
முதலில் பதியும் 25 பேருக்கு முன்னுரிமையுடன் மதிய உணவு மற்றும் குறிப்பேடுகள் வழங்கப் படும். இத் தகவலை சிறுகமணி வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ப. முரளி அா்த்தநாரி தெரிவித்தாா்.