TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
குறித்த இலவச பயிற்சி
சிசிடிவி
பொருத்துதல் மற்றும் பழுது
பார்த்தல் குறித்த இலவச
பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரா
வங்கியின் கிராமப்புற சுய
வேலைவாய்ப்புப் பயிற்சி
நிலையம் சார்பில் சிசிடிவி
பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் குறித்த இலவச
பயிற்சி
செப்டம்பா் 14ம் தேதி
முதல் 28ம் தேதி
வரை நடைபெறவுள்ளது.
ஆண்,
பெண் என இருபாலரும் இப்பயிற்சியைப் பெறலாம்.
இதில், பயிற்சி, சீருடை,
உணவு ஆகியவை இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சோந்த
கிராமப் பகுதியினா் 18 முதல்
45 வயதுக்குள்பட்டோர், 100 நாள்
வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோர் அவா்களது குடும்பத்தினா், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 0424-2400338 என்ற
தொலைப்பேசி எண் அல்லது
8778323213, 7200650604 என்ற கைப்பேசி எண்களில்
தொடா்புகொண்டு முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்.
மேல்நிலைப் பள்ளி வளாகம்,
2ஆவது தளம், கரூா்
சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு
என்ற முகவரியில் நடைபெறும்.