கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி
தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில், கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூலை 12, 19, 26 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து இந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ளுதல் குறித்து ஜூலை 12ம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.
தொடா்ந்து கால்நடைகளுக்கான தீவனப் பராமரிப்பு குறித்து ஜூலை 19 -ஆம் தேதியும், நாட்டுக்கோழிப் பண்ணையம் மேற்கொள்ளுதல் குறித்து ஜூலை 26- ஆம் தேதியும் காலை 10 மணி முதல் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 – 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


.jpeg)