அப்பளம், ஊறுகாய்
தயாரிப்புக்கு இலவச
பயிற்சி
திருப்பூர் – அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் கனரா வங்கியின்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.இந்த மையம் சார்பில்,
கிராமப்புற மக்களுக்கு இலவச
தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது,
அப்பளம், ஊறுகாய் மற்றும்
மசால் பொடி தயாரிப்பு
பயிற்சியில் இணைவதற்கான முன்பதிவு
தற்போது நடைபெற்று வருகிறது.பயிற்சியில், 30 வகை மசாலா பொடிகள்;
அப்பளம், ஊறுகாய் மற்றும்
ஜாம் தயாரிப்பு குறித்து,
பத்து நாட்கள் இலவச
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் மட்டும்
பயிற்சியில் சேரலாம். எவ்வித
கட்டணமும் கிடையாது.
பயிற்சி
நாட்களில், காலை, மாலை
தேநீர், மதிய உணவு,
பயிற்சி உபகரணங்கள், சீருடை
இலவசமாக வழங்கப்படும். பயிற்சி
முடிப்போருக்கு, தொழில்
துவங்க கடன் ஆலோசனை,
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர், 86105 33436,
94890 43923, 77082 74497 என்கிற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.