TNPSC குரூப்
– 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
குரூப் – 4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் துவங்க உள்ளது.
தேர்வாணையம் அறிவித்த குரூப் – 4 தேர்வு மூலம், வி.ஏ.ஓ., – இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களில், 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குரூப் – 4 தேர்வுக்கன இலவச பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பயிற்சியின் இறுதியில் மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


