Home Blog TNPSC குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

TNPSC குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

0
Free Training for TNPSC Group 4 Competitive Exam

TNPSC
குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

TNPSC குரூப் 4 போட்டித்
தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மே 11-ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை
24
ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள TNPSC
குரூப் 4

தேர்வில்
கலந்து கொள்ளும் தேர்வா்களுக்கு, தமிழக அரசின் சார்பில்
போட்டித் தேர்வுகள் பயிற்சி
மையத்தால் கட்டணமில்லா பயிற்சி,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சா்
தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினா் ஆடவா்
கலைக் கல்லூரி ஆகிய
இடங்களில் பிற்பகல் 2 முதல்
மாலை 5 மணி வரை
அளிக்கப்படவுள்ளது.

இந்தப்
பயிற்சிக்கு குறைந்தபட்சம் 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதேர்டு, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

போட்டித்
தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள்
இல்லை. சா் தியாகராயா
கல்லூரி, நந்தனம் அரசு
ஆடவா் கலைக் கல்லூரி
ஆகிய இடங்களில் முறையே
500
மற்றும் 300 தேர்வா்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனா்.

பயிற்சியில் சேர விரும்புவோர் அகில
இந்திய குடிமைப்பணித் தேர்வுப்
பயிற்சி மைய இணையதளம்
வாயிலாக மே 11 வரை
விண்ணப்பிக்கலாம்.

அவா்கள்
தங்கள் கல்வி, வயது
ஆகிய தகுதிகள் குறித்த
விவரங்களை தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம்.

பத்தாம்
வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு
செய்யப்பட்ட தேர்வா்கள் விவரம்
விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக
உள்ள இடங்களுக்கு ஏற்ப
நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவா். இந்த மாத முதல்
வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version