TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி
சென்னை
கிண்டியில் உள்ள தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும்
25ம் தேதி முதல்
டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் துவங்க உள்ளனதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகள் தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள், 25ம்
தேதி காலை 10.30 மணிக்கு
துவங்க உள்ளது.
பயிற்சி
வகுப்பில், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்குவதோடு, மாதிரி
தேர்வுகளும் நடத்தப்படும். எனவே,
போட்டித் தேர்வுக்கு தயாராகும்
இளைஞர்கள், இலவச பயிற்சி
பெற, தங்கள் பெயர்
மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு, peeo.chn@tn.gov.in
என்ற இ – மெயில்
முகவரிக்கு அல்லது 94999 66028
என்ற ‘வாட்ஸ் ஆப்‘
எண்ணுக்கு தகவல் அனுப்பவும். இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை இயக்குனர்
தெரிவித்துள்ளார்.