கோவையில் ஆசிரியர்
வாரிய தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி
ஆசிரியர்
தேர்வு வாரிய தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம்
பிஜி அசிஸ்டென்ட், உடற்கல்வி
இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை
10 முதல் 1 மணி வரை,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழு
விவாதம், பாட வாரியாக
வகுப்புகள், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது, 94990 55938 என்ற
எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.