இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
இந்திய
குடிமைப்பணி தேர்வுக்கான இலவச
பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.மீனவ
சமுதாயத்தைச்சேர்ந்த பட்டதாரி
இளைஞர்கள், இந்திய குடிமைப்பணி தேர்வுக்காக, இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது.
அகில
இந்திய குடிமைப்பணி பயிற்சி
நிலையம், மீனவர் நலத்துறை
சார்பில், ஆண்டு தோறும்,
20 மீனவ பட்டதாரி இளைஞர்களை
தேர்வு செய்து, ஆயத்த
பயிற்சி அளிக்கப்படுகிறது.கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய
உறுப்பினர்களின் வாரிசு
பட்டதாரி இளைஞர்கள், பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
பயிற்சிபெற விரும்புவோர், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்கலாம். கூடுதல்
விவரங்களுக்கு, ஈரோடு
கலெக்டர் அலுவலகம், பெருந்துறை ரோட்டில் உள்ள, மீனவர்
நலத்துறை உதவி இயக்குனர்
அலுவலகத்தை, 0424 2221912 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

