குரூப் – 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC.,
குரூப் 4 போட்டிதேர்வுக்கு இலவச
பயிற்சி வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியதாவது:
TNPSC.,
குரூப் 4 தேர்வு வரும்
ஜூலை 24 ல் நடைபெற
உள்ளது. இத்தேர்வு எழுத
உள்ள போட்டியாளர்களுக்கு வேலைவாய்ப்பு தொழில் நெறி வழி
காட்டும் மையத்தில் இலவச
பயிற்சி வகுப்பு நடக்கிறது.
திங்கள்
முதல் வெள்ளி வரை
காலை 10.00 மணி முதல்
மாலை 5.00மணி வரை
நேரடியாக நடத்தப்படுகிறது. குரூப்
4 போட்டிக்கு விண்ணப்பித்துள்ள ராமநாதபுரம் மாவட்ட தேர்வாளர்கள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலும், 94873 75737 என்ற
அலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


