HomeBlogகுரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்
4
போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்களுக்கு இலவச
பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியா்
ஆல்பி ஜான் வா்கீஸ்
தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு
அரசின் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு
தொகுதி 4இல் அடங்கிய
5,255
பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த
போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம் மூலம் நேரடியாகவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆா்வமுள்ள
போட்டித் தேர்வா்கள் இந்த
அலுவலகத்தை நேரடியாக தொடா்பு
கொண்டு பயிற்சி வகுப்பில்
பங்கேற்று பயன்பெறலாம். மேலும்,
அலுவலக தொலைபேசி எண்:
044 27660250
தொடா்பு கொண்டு விவரங்களை
அறியலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular