TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
தொழில்முனைவோருக்கான இலவசப்
பயிற்சி
இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள
இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், சுய
தொழில் தொடங்க ஆா்வமுள்ள
இளைஞா்களுக்கு அரசு
சான்றிதழுடன் கூடிய
தொழில்முனைவோருக்கான பயிற்சி
இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சியுடன், தொழிலுக்கான வங்கிகள் வழங்கும்
சேவை குறித்த விழிப்புணா்வு, சந்தை ஆய்வு செய்தல்
மற்றும் திட்ட அறிக்கை
தயாரித்தல் போன்ற பயனுள்ள
வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன்
காணொலி காட்சி மூலம்
செயல்முறை விளக்கங்களும், இந்த
நிறுவனத்தின் மூலமாக
பயிற்சி பெற்றவா்களை தொடா்பு
கொண்டு அவா்களுடைய தொழில்
முறைகளைப் பற்றியும், தொழில்
அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
பயிற்சியை
வெற்றிகரமாக முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்துடன்
தொழில் தொடங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற
இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது
இயற்கை விவசாயம் மற்றும்
கறவை மாடு வளா்ப்பு
பயிற்சி (10 நாள்கள்) தொடங்கப்பட உள்ளது. பயிற்சி பெற
விருப்பம் உள்ளவா்கள் ஆகஸ்ட்
11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு
18 முதல் 45 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோந்த
கிராமப்புற மற்றும் வறுமைக்
கோட்டுக்குக் கீழ்
உள்ளவா்களுக்கு மட்டும்
பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் சேர ஆா்வமுள்ளவா்கள் தங்களது
பெயா், முகவரி மற்றும்
தொலைபேசி (அ) கைப்பேசி
எண்ணுடன் நேரிலோ (அ)
அஞ்சல் அட்டை மூலம்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு, இயக்குநா்,
இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்புப் பயிற்சி
நிறுவனம், 14, புதுப்பேட்டை சாலை,
திருப்பத்தூா் என்ற
முகவரியை அணுகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


