போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – கடலுார்
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கான இலவச
நேரடி பயிற்சி வகுப்பில்
சேர்ந்து பயன்பெற இளைஞர்களுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டம் வழியாக
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் பல்வேறு
துறைகளில் உள்ள குரூப்-B
மற்றும் குரூப்-C பணிக்காலியிடங்கள் அடங்கிய SSC-CGL தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான
கல்வி தகுதி ஏதேனும்
ஒரு பட்டப்படிப்பு. குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு https://ssc.nic.in/ என்ற தேர்வாணைய
இணையதளம் மூலம் வரும்
23.01.2022ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி
வகுப்புகள் கடலுார் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் வரும் 19ம்
தேதி முதல் திங்கள்
முதல் வெள்ளி வரை
பகல் 12 மணி முதல்
மதியம் 2 மணி வரை
இணைய வழியில் நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் தங்களது
புகைப்படம் மற்றும் ஆதார்
எண் ஆகிய விவரங்களுடன் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு
கொண்டு முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு 04142 290039 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். இதில், கடலுார்
மாவட்ட இளைஞர்கள் பங்கேற்று
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


