போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வு
வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Group 2A, Group 4 மற்றும் தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு
வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு
ஆய்வாளர் (சப்–இன்ஸ்பெக்டர்) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
Madurai: இப்பயிற்சி வகுப்புகளில் தற்போது ஏராளமான போட்டி
தேர்வர்கள் பயிற்சி பெற்று
வருகின்றனர். குறிப்பிட்ட காலவெளி
இடையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வலுவலக நூலகத்தில் அனைத்து
போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் தேர்வர்கள் பயன்படுத்தும் வகையில்
பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே,
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க
போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப நகல்,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மற்றும் ஆதார் அட்டை
நகல் ஆகியவற்றுடன் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 96989 36868
என்ற எண்ணிலோ தொடர்பு
கொள்ளலாம்.
மேலும்,
வரும் 25ம் தேதி
முதல் தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Group 2A, Group 4 தேர்வுகளுக்கான மாதிரித்
தேர்வுகள் இவ்வலுவலகத்தில் நடைபெற
இருப்பதால் மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள்
வருகையை உறுதி செய்ய
‘டிஎன்பிஎஸ்சி குரூப்2
மாடல் டெஸ்ட்‘ என்று
96989 36868 என்ற எண்ணிற்கு தங்களது
பெயருடன் வாட்ஸ் ஆப்
மூலமாக குறுந்தகவலோ அல்லது
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ தொடர்பு கொண்டு
பதிவு செய்து கொண்டு,
தேர்வில் கலந்து கொள்ளலாம்.