கோவை அம்மா
IAS அகாடமி சார்பில் இலவச
பயிற்சி வகுப்புகள்
IAS அகாடமி சார்பில் இலவச
பயிற்சி வகுப்புகள்
கோவை
அம்மா IAS அகாடமியில் அரசு
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன்
குத்துவிளக்கு ஏற்றி
துவைக்கிவைத்தார்.
கோவையில்
நல்லறம் அறக்கட்டளையின் சார்பாக
பல்வேறு மக்கள் நலபணிகளை
சிறப்புடன் செய்துவரும் சமூக
ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன்
கோவையில் முதன் முதலாக
அம்மா IAS அகாடமியை துவக்கி
ஏழை,எளிய நடுத்தர
மக்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக இலவச பயிற்சி
வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது, குரூப் 1, குரூப்
2, குரூப் 2A, மற்றும் 4 தேர்வுகளுக்கு தயாராகிவரும் ஏழை,
எளிய மாணவ, மாணவிகள்
பயன்பெரும் விதமாக இலவச
வழிகாட்டுதல் நிகழ்ச்சியும், கலந்தாய்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய
நல்லறம் அறக்கடளையின் தலைவர்,
சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன்
அம்மா IAS அகாடமியில் IAS படிக்கும்
மாணவர்களுக்கு மட்டும்
இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வந்த நிலையில்
அரசு தேர்வுகளுக்கு தயாராகி
வரும் மாணவர்களுக்காக இலவச
பயிற்சி முகாமை தற்பொழுது
துவங்கியுள்ளோம்.
மாணவர்கள்
இந்த வாய்ப்பை சரியாக
பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல
நிலைக்கு உயரவேண்டும் என்று
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.