சிவகங்கை மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள்
சிவகங்கை
மாவட்டத்தில் உள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
மணிகணேஷ் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில்
மத்திய மாநில அரசால்
அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு
போட்டி தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் நமது
மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும்
தன்னார்வ வட்டத்தின் வாயிலாக
TNPSC குரூப் 2 மற்றும்
2A தேர்வுகளுக்கான வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு தினமும் இலவசமாக
நடைபெறுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த
வகுப்பில் 50க்கும் மேற்பட்ட
மாணவ மாணவிகள் படித்து
வருகின்றனர். மேலும் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 5529 காலியிடங்களுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் 4 தேதி முதல்
நடைபெற்று வருகிறது. எனவே
அரசு வேலையை தன்னுடைய
கனவாக கொண்டு உள்ள
இளைஞர்கள் இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ள
வேண்டும.
மேலும்
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்
இளைஞர்களுக்கும் பயன்
தரும் வகையில் மத்திய
மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான
அனைத்து பாட குறிப்புகளும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்
இளைஞர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பாடகுறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்


