HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கடலுார்
- Advertisment -

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – கடலுார்

Free Training Classes for Competitive Exams - Cuddalore

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்கடலுார்

கடலுார்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் பல்நோக்கு
பணியாளர், பெண்கள் படை
பயிற்சிவிப்பாளர், மருத்துவ
உதவியாளர் போன்ற 3261 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய
இணையதளம் வாயிலாக 25ம்
தேதி வரை விண்ணப்பிக்காலாம்.

விண்ணப்பத்தாரர்களுக்கு இலவச பயிற்சி
வகுப்புகள் கடலுார் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் 9ம் தேதி
முதல் நடந்து வருகிறது.

வாரந்தோறும் சனிக் கிழமைகளில் காலை
10:30
மணி முதல் மாலை
5:30
மணி வரை நடக்கும்
பயிற்சி வகுப்பில் பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள், மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
04142 290039
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -