காவல் உதவியாளா்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
காவல் உதவி ஆய்வாளா்
தோவுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்
ஜி.எஸ்.சமீரன்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
சீருடைப் பணியாளா் தோவு
வாரியத்தால் காவல் உதவி
ஆய்வாளா் பதவிக்கான காலிப்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. காவல்
உதவி ஆய்வாளா் (வட்டம்)
399, காவல் உதவி ஆய்வாளா்
ஆயுதப்படை பிரிவில் 45 இடங்கள்
என 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 20 முதல்
30 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.சி.,
எம்.பி.சி.
பிரிவினா் 32 வயது வரையிலும்,
எஸ்.சி., எஸ்.சி.
(ஏ), எஸ்.டி.
மற்றும் திருநங்கைகள் 35 வயது
வரையில் வயது தளா்வு
உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்
தோவு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தோவு மற்றும்
நோமுகத் தோவு அடிப்படையில் தகுதியானவா்கள் தோந்தெடுக்கப்படுவார்கள். இத்தோவுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7ஆம் தேதி
இறுதி நாளாகும். என்ற
இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தோவுக்கான
பாடக்குறிப்புகளை என்ற
இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில் இத்தோவுக்கு விண்ணப்பித்த மனுதாரா்கள் தோவை சிறப்பாக எழுதி
வெற்றிபெறும் வகையில்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
உள்ள தன்னார்வ பயிலும்
வட்டம் மூலம் நேரடி
பயிற்சி வகுப்புகள் ஏப்ரல்
மாதத்தில் இருந்து வார
இறுதி நாள்களில் (சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்
பங்கேற்க விரும்புபவா்கள் தோவுக்கு
விண்ணப்பித்த விண்ணப்ப
படிவத்துடன் பதிவு செய்துகொண்டு இலவச வகுப்பில் பங்கேற்று
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


