போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்
சூலுார்
ஆர்.வி.எஸ்.,
கல்வி அறக்கட்டளை சார்பில்,
கிராமப்புற மாணவர்கள், குடிமைப்
பணி தேர்வுகளில் வெற்றி
பெறுவதற்காக, இலவச பயிற்சி
பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
ஆர்.வி.எஸ்.,
குழும தலைவர் குப்புசாமி, துவக்கி வைத்தார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மையத்தின் இயக்குனர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்:
கிராமப்புற மாணவர்களின் ஐ.ஏ.எஸ்.,
கனவை நிறைவேற்ற இம்மையம்
துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 100 மாணவ, மாணவிகள்
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குரூப் 4 போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். சனி
மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
புத்தகங்கள் இலவசம். வரும் 24ம்
தேதி நுழைவு தேர்வு
நடக்கும்” என்றார்.ரேடியன்
பயிலக நிறுவனர் ராஜ
பூபதி, கல்லுாரி இயக்குனர்
ஸ்ரீ வஸ்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.