
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சி
வரும், 13ல், ‘மா’வில் ஒருங்கிணைந்த பூச்சிநோய் நிர்வாகம் என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 13 காலை, 10:00 மணிக்கு, ‘மா’வில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது.
இப்பயிற்சியில், ‘மா’ பயிரை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.அதில், விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286-266345, 9943008802, 7010580683, என்ற தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

