TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
இலவச Tally பயிற்சி – காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுய
தொழில் பயிற்சி மையத்தில்
வரும் ஜூலை 4ம்
தேதி முதல் இலவச
கணினி தொழில் விவரக்
கணக்கு (Tally) பயிற்சி
தொடங்க இருப்பதாக அந்த
மையத்தின் இயக்குநா் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் கூறியது:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்
சந்நிதி அருகில் இந்தியன்
வங்கியின் சார்பில், சுய
தொழில் பயிற்சி மையம்
செயல்பட்டு வருகிறது.
இந்த
மையத்தின் சார்பில், கணினி
வழி தொழில் விவர
கணக்குப் பயிற்சி (டேலி)
30 நாள்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. இந்தப்
பயிற்சியுடன் மதிய
உணவு, தேநீா், சீருடை
ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
வயது
18 முதல் 40 வயது வரை
இருக்க வேண்டும். பயிற்சி
முடித்தவுடன் சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். ஆண்,பெண்
இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.
வரும்
ஜூலை 4ம் தேதி
இப்பயிற்சி தொடங்க இருப்பதாகவும், குறுகிய இடங்களே இருப்பதாலும் விரும்புவோர் உடனடியாக
விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு, 044 27268037 என்ற
எண்ணில் தொடா்பு கொண்டு
தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


